• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடிக்கையாளர் சேவை மைய பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொந்தரவு

April 4, 2023 தண்டோரா குழு

கோவையில் வாடிக்கையாளர் சேவை மைய பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை போத்தனூர் மைல்கல் உமர் நகரில், சிட்டி மீட்டர் ஆட்டோ சங்கத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில்,வாடிக்கையாளர் டோல் பிரீ எண்ணிற்கு குறிப்பிட்ட இரண்டு செல்போன் எண்களில் இருந்து அடிக்கடி ஆபாச குறுந்தகவல் அனுப்பி,அங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கு மர்ம நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் இது குறித்து சிட்டி மீட்டர் ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ஆபாச குறுந்தகவல் அனுப்பப்பட்ட 2 செல்போன் எண்களை வைத்து மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க