September 15, 2020
தண்டோரா குழு
வாடகை பணம் வாங்க கூடாது என மகன் அடித்து துன்புறுத்துவதாக வயதான தம்பதியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் ராமானுஜ நகர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் லட்சுமி (80) மற்றும் அவரது கணவர் தாமோதரசாமி ஆகியோர் தங்களது ஐந்தாவது மகன் கார்த்திகேயன் பூர்வீக நிலத்தில் கிடைக்க பெறும் வாடகையை இனி வாங்க கூடாது என கூறி தொடர்ந்து அடித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து லட்சுமி பாட்டி கூறுகையில் ,
தங்களுக்கு ஐந்து மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூன்று மகன்கள் இறந்து போனதாகவும் தற்போது ஐந்தாவது மகன் மற்றும் மகளும் உயிருடன் இருப்பதாக தெரிவித்த அவர் பூர்வீக நிலத்தில் இருந்து கிடைக்க பெறும் வாடகை வருமானத்தை கொண்டு ஜீவனாம்சம் செய்து வருவதாக கூறினார்.
இந்நிலையில் தனது மகன் கார்த்திகேயன் நிலத்தில் கிடைக்க பெறும் வாடகையை இனி நீங்கள் பெற கூடாது என கூறி இருவரையும் தொடர்ந்து அடிப்பதாக கூறிய அவர் கணவரை மகன் கண்மூடித்தனமாக தாக்கியதால் தோள்பட்டை முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் தற்போது வாடகை பணத்தை கார்த்திகேயனே பெற்று கொள்வதால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி அவதிபட்டு வருவதாகம் தாய்,தந்தை என்றும் பாராமல் மோசமான வார்த்தைகளால் பேசுவதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு மகன் கொண்டு சென்றுள்ளதாக வேதனையுடம் தெரிவித்தார்.
தொடர்ந்து தங்களை தாக்கி துண்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதியவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.