July 9, 2020
தண்டோரா குழு
சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குணசேகரன், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டின் கீழ் பகுதியில் தனியாக வசித்து வந்த நிலையில் மாடியை அஜித் மற்றும் அவரது குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
இதற்கிடையில், ஊரடங்கு காரணமாக அஜித் 4 மாதமாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது.கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித்திடம் வாடகை கேட்டதாக தெரிகிறது. அப்போது, குணசேகரனுக்கு அஜித்தின் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாகி அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்தியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்தனர்.