• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மோடி!

December 24, 2018 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை சிறந்த நிர்வாக தினமாக கொண்டாடப் படவுள்ளது.இதனை முன்னிட்டு வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயம் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த விழாவில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க