• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு – தேர்தல் ஆணையத்திடம் 21 எதிர்க்கட்சிகள் மனு

May 21, 2019 தண்டோரா குழு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாக கூறி 21 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். இன்று காலை நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதில் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கை நாள் வரை வாக்கு இயந்திரங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று பிற்பகலில் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

அம்மனுவில், மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு முன்னர், விவிபேடில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். கடைசியில் எண்ணக் கூடாது. விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்கும் போது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், விவிபேட் இயந்திரங்களில் உள்ள 100 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும்.ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுகளுக்கும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தால்கூட, அந்த தொகுதியில் முழுமையாக ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் படிக்க