• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

April 1, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 4427 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.இவ்வாக்குச்சாவடிகளில் 6885 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5316 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 5894 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் மையமாகவும், மே-2ம் தேதி அன்று மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமாகவும் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி செயல்பட உள்ளது.
மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளதால், காப்பு அறைகளில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தேவையான முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையின் போது உரிய வழியில் சென்று வர ஏதுவாக பிரத்யேக தடுப்புகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் கூடுதல் தடுப்புகள் அமைத்தல், குடிநீர் வசதி, கழிப்பறைகள் மற்றும் தேவைப்படும் இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்துதல் குறித்து மாநகராட்சி, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்ளுக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு அலுவலர் மேனகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன் மற்றும் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க