• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை – பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

April 10, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு 10 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் முகவர்களும் அங்கு தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்கு இருக்கும் முகவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறி பா.ஜ.க மாவட்ட தலைவரும் , தலைமை ஏஜென்டுமான நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது முகவர்களுக்கு கழிவறை, தங்குமிடம், உணவு வசதி கூட இங்கு கிடையாது என்றும், வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் முகவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், ஆனால் அதை அரசு செய்து கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

கொரோனா காலத்திலும் அனைத்து கட்சிகளின் முகவர்களும் குறுகிய இடத்தில் தங்க
வைக்கபட்டுள்ளதால் உள்ளதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டு இருப்பதாகவும், அதிகாரிகள் நாளை முதல் உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து இருப்பதாகவும் ,அப்படி செய்து கொடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க