• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என்பதை நிரூபிக்க அனைத்து கட்சி கூட்டம் ?

May 4, 2017 தண்டோரா குழு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என்பதை நிரூபிக்க மே 12-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், மற்றும் பல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று யாராவது நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதனை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியாது என்பதை நிரூபிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க