• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் வந்துள்ள ரபேல் தீர்ப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் – சீதாராம்யெச்சூரி

April 10, 2019 தண்டோரா குழு

ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்கிற குற்றச்சாட்டில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவை வருகை தந்தார். பின்னர் சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த இரண்டு நாட்களாக மதுரை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். இந்த பிரச்சார களத்தில் அனுபவ அடிப்படையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெரும் என்று உணர்கிறேன். மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு இடங்களிலும் மகத்தான வெற்றிபெருவோம். ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட மனு மீதான உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தீர்ப்பு முக்கியமானது. அதுவும் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் வந்துள்ள தீர்ப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் அம்சம் என்னவென்றால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது. ஏன் என்றால் அரசு உண்மைகளை உச்சநீதிமன்றத்திடம் இருந்து மறைத்தது.பல்வேறு பொய்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை எதுவும் இல்லையென பாராளுமன்ற மதிப்பீட்டு ஏற்கனவே சொல்லியுள்ளது.
மொத்தம் 126 போர் விமானம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் 36 விமானங்கள் இயங்க தயாராக இருந்த நிலையில், மற்ற விமானங்கள் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் தயாரிக்க வேண்டிய சூழலில், மறு பேச்சுவாரத்தை பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமரால் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஏன்?

போர் விமானம் இருந்திருந்தால் பாலக்காட் தாக்குதலை சிறப்பாக செயல்படுத்தியிருக்க முடியும், நாட்டின் பாதுகாப்பு பிரதானம், நாட்டிலேயே தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக என முழங்கும் பிரதமர், புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மூலம் ரபேல் போர் விமானத்தை தாமதப்படுத்தியது ஏன்? மறு பேச்சுவார்த்தை மூலம் மிகப்பெரிய அளவில் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்த தனிக்குழு இருக்கும்போது பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தையில் நேரடியாக நடத்தியது ஏன்? ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல துறைகளின் பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளது.ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மறு பேச்சுவாரத்தை நடத்தியதற்கு இரு வாரங்கள் முன்பு அணில் அம்பானி நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது எப்படி? மீதமுள்ள 90 போர் விமானங்கள் தயாரிப்பு மூலம் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு வந்திருக்க வேண்டிய சூழலில், ஊழல் நடைபெற்றுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் பத்திரம் பெற்றதில் 94.5சதவீதம் பாஜக வாங்கியுள்ள தகவாளின் அடிப்படையில், ஊழல் மூலம் பெற்ற பணத்தை சட்ட ரீதியாக மாற்றும் நடவடிக்கை என தெரிகிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கூட காப்பாற்ற முடியாத உங்களால், எப்படி நாட்டை காப்பாற்ற முடியும். ரபேல் கொள்முதலின் புதிய ஒப்பந்தம் படி 41% ஒரு போர் விமானத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனாலேயே ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதப்படுத்தப்பட்டு உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்றாலும், கடுமையான நடவடிக்கைகள் மூலம் ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது. ரபேல் விழக்கை இனிமேல் தாமதப்படுத்தாமல், விரைவாக விசாரணை நடத்தி, வழக்கை முடிக்க வேண்டும். சிபிஐ அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது.

ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் செய்து வரும் அரசால் பொய்யாக பேசப்பட்டு வருகிறது. தனியார்மயமாக்கல் என்ற பெயரில் வளர்ச்சி திட்டங்கள் அம்பானி, அதானி என தனது கார்ப்பரேட் குடும்ப நண்பர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளே மீறப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் மீதே குற்றச்சாட்டு வரப்படுவது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பது போன்றது. மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் இது. இந்த தேர்தலில் மக்கள் சுனாமி வரும். தீவிரவாதத்திற்கு எதிரானக கடுமையான நடவடிக்கை எடுக்கும் ஒரே கட்சி பாஜக என சொல்லும் பிரதமர் ஆட்சியில் தான், கடந்த 5ஆண்டுகளில் 300சதவீதம் அதிகமாக ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல், 200சதவீதம் அதிகமாக தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேட்பாளராக நிற்கும்போது, அவர்களின் படம் தொளிக்காட்சியில் வெளியிடப்பட்டதில்லை.பாஜகவின் தேர்தல் அறிக்கை, “ஜூம்லா” பெஸ்டோ, எதார்த்தமான அறிக்கை இல்லையென்றும், குழந்தைகளை சமாதானப்படுத்துவதற்கு சொல்லப்படும் கதைகள் போன்றது என்றும் விமர்சித்தார். Surgical strike நடந்த பிறகு தான் பாலக்கோட், புல்வாமா தாக்குதல் நடந்துள்ளது. அப்போது தீவிரவாதம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா?இராணுவம் பற்றி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை மீறி பிரதமர் பேசியும், தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. இராணுவம் தொடர்பாக பிரதமரின் நேற்றைய பேச்சு தொடர்பாக சிபிஎம் அளித்த புகாரின் அடிப்படையில் தான் பிரதமருக்கு நோட்டிஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பி.எம்.மோடி படத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது எதற்கு? பிரதமர் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார். பாராளுமன்றத்தில் வலிமையான குரல் கொடுக்க சிபிஎம்மை சேர்ந்த பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களியுங்கள். மோடிக்கும் பிரெஞ்சு அரசுக்கும் தொடர்புள்ளது என கோவையில் குடிநீர் விநியோக திட்டத்தை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

கேரளாவில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்டால், பிரதமராக முன்மொழிவீர்களா என்ற கேள்விக்கும், மாநில சுயாட்சிக்கு முன்னுரிமை கொடுப்பீர்களா என்ற கேள்விக்கும் மழுப்பலான பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க