• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்குபதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை – தேர்தல் அதிகாரியிடம் முறையீடு

April 3, 2019 தண்டோரா குழு

வாக்குபதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையீட்டனர்.

கோவை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கல்யானசுந்தரம் மாவட்ட ஆட்சியரும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராசாமணியிடம கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் வாக்குபதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை எனவும் அதனை தெளிவாக தெரியும்படி சரி செய்ய வேண்டும் என கூறி கோரிக்கை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேசிய கட்சிகளை எதிர்த்து தங்கள் கட்சி போட்டியிடுகிறது.கோவை மக்களின் நீண்ட கால தேவைகளை இதுவரை பூர்த்தி செய்யாத ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களை இருந்து தேவைகளை நிறைவேற்றாதவர்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறினார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தங்களது வேட்பாளருக்கு ஒரு ஸ்லிப் வழங்கபட்டதாகவும் அதில் வாக்கு எந்திரத்தில் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் சின்னங்கள் எப்படி இருக்கும் என்பது மாதிரி வழங்கபட்டதாகவும் மற்ற சின்னங்கள் தெளிவாக உள்ள நிலையில் விவசாயி சின்னம் கண்ணுக்கே தெரியவில்லை என தெரிவித்தார்.

இதே நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பட்சத்தில் தங்களை தோற்கடிக்கும் விதமாக இருப்பதாகவும் சின்னம் தெளிவாக இருக்கும் வகையில் சரிசெய்யபட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார் .இதுவரை வாக்கு இயந்திரங்களில் பதிய வேண்டியவை வந்து சேரவில்லை என தெரிவிக்கபட்டதாக கூறியவர் கட்டாயம் இது சரி செய்யபடும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளதாகவும் சின்னம் சரிசெய்யபடாவிட்டால் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க