• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம்

January 9, 2021 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒரு பகுதியாக வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது.

கோவை விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த விழாவில் கோவை மாநகரின் சிறப்புகளை விவரிக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு வாகன விபத்துகளை தவிர்க்கும் விதமாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பயண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை லட்சுமி மில் சந்திப்பு அருகே இந்த விழிப்புணர்வு பயணம் தொடங்கியது இதனை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் கிழக்குப்பகுதி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த வாகன விழிப்புணர்வு பயணமானது லட்சுமி மில் சிக்னல் அண்ணா சிலை சிக்னல் உப்பிலிபாளையம் சிக்னல் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் நடைபெறுகிறது.

இந்த விழிப்புணர்வின் போது பொதுமக்கள் எவ்வாறு வாகன விபத்துக்களை தவிர்க்க வேண்டும் மேலும் போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிக்கவேண்டும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் என்ன விபத்துகள் எவ்வாறு ஏற்படுகின்றது என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதே போல் விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு சக்கர வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க