• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதால் புதிய வாகனத்தை ஒப்படைத்த உரிமையாளர்

July 26, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் வாகனத்தை பதிவு செய்ய ஆர்டிஓ லஞ்சம் கேட்‌டதால், பாதிக்கப்பட்ட நபர் தனது புதிய இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கச் செ‌ன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த நாகரா‌ஜ்.இவர் கடந்த 30ஆம் தேதி அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட வாகன விற்பனையகத்தில், இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பதற்காக கூடுதலாக பணம் வேண்டும் என கடை ஊழியர்கள் நாகராஜனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. .

இதையடுத்து, இது குறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவ குருநாதனிடம் நாகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அது‌ தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றார்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பான விசாராணைக்கு ஆஜராகக் கோரி நாகராஜுக்கும், வாகன விற்பனை‌யகத்திற்கும் சம்மன் அளித்துள்ளனர்.இச்சம்பவத்தால் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க