• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வழக்குகள் நிலுவையில் உள்ள பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாவது இடம்

January 1, 2019 தண்டோரா குழு

அதிகம் நிலுவை வழக்குகள் கொண்ட நீதிமன்றங்களின் பட்டியலில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளது என National Judicial Data Grid வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

national judicial data grid 2018ம் ஆண்டு நீதிமன்றத்தில் நிலுவையில் அதிகம் உள்ள வழக்குகள் மற்றும் 2018ம் ஆண்டில் விசாரிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளின் எண்ணிக்கை 49,85,580 ஆக உள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 3,99,233 வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புள்ளி விவரத்தில் இந்திய அளவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அதிக நிலுவை வழக்குகள் கொண்ட நீதிமன்றங்களின் வரிசையில் சென்னை உயர் 3 வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது நீதிமன்றம் (8.01 % நிலுவை வழக்கு), இந்த பட்டியலில், முதலிடத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் (14.87 % நிலுவை வழக்கு)உள்ளது, இரண்டாவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் (14.54 % நிலுவை வழக்கு) உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் தொடர்ந்த வழக்குகளை அதிகமாக நிலுவையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க