• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

January 24, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர் தஞ்சாவூர் உட்பட மூன்று மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விலை நிலங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பெரும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வசுதா மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வறட்சி பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கமளித்தார். மத்திய குழுவினர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

இதில் ஏக்கருக்கு 25 ஆயிரம், தொழிலாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, உயிரிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்‌.மாநிலத்தில் வறட்சி பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழு வரும் 25-ம் தேதி சென்னைக்குத் திரும்புகிறது.

மேலும் படிக்க