• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வரும் 8-ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு – பாஜக தலைமை அறிவிப்பு

April 5, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான, பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 ம் தேதி வெளியாகும் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு வருகிறது.

எனினும் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் நிலையில் ஆளும் பாஜக கட்சி இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்து வருகிறது. பாஜக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்று எதிர்கட்சிகள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில்,பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்படும் பாஜக தலைமை அறிவித்துள்ளது. டெல்லி பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க