• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருமான வரித்துறை சோதனை காரணமாக ஜாஸ் சினிமாஸில் மதிய காட்சிகள் ரத்து

November 9, 2017 தண்டோரா குழு

வருமான வரித்துறை சோதனை காரணமாக வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் மதிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய திரையரங்குகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதனால் ஜாஸ் சினிமாஸில் மதிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க