• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக வேல்முருகனுடன் விவாதிக்க ராமதாஸ் தயாரா – வேல்முருகன் கேள்வி

April 3, 2019 தண்டோரா குழு

தைலபுரம் தோட்டம் ராமதாஸ்க்கு மாமியார் வீட்டில் இருந்து கொடுத்த பரிசு என்றும் ஒன்றரை ஏக்கருக்கு மட்டுமே சொந்தக்காரான ராமதாஸ், பல ஆயிரம் ஏக்கருக்கு சொந்தகாரராகி உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசியவர்,

கோவை 6 வயது சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு உதவி செய்ய உள்ளோம். வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, முழுக்க முழுக்க ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய். 2 கோடி வன்னிய மக்களுக்காக கல்வி, கோவில் கட்டுவதாக கூறி, நிதி வசூல் செய்தார். வன்னியர் சங்க அறக்கட்டளை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் தொடர்பாக ராமதாஸ் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வன்னியர் சங்கம் ராமதாஸ் உருவாக்கியது அல்ல. 3 லட்சம் கோடி மதிப்புள்ள செங்கவராயன் அறக்கட்டளை சொத்துகள், வரலாற்றை மறைத்து ராமதாஸ் பேசி வருகிறார். ஒன்றரை ஏக்கருக்கு மட்டுமே சொந்தக்காரான ராமதாஸ், பல ஆயிரம் ஏக்கருக்கு சொந்தகாரராகி உள்ளார் எனவும் விமர்சித்தார்.

மேலும், தைலபுரம் தோட்டம் ராமதாஸ்க்கு மாமியார் வீட்டில் இருந்து கொடுத்த பரிசு. வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக வேல்முருகனுடன் விவாதிக்க ராமதாஸ் தயாரா என கேள்வி எழுப்பினார். வன்னிய மக்களின் ரத்தங்களை உறிந்து அணுக்களை கூட பயன்படுத்தி ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்கிறார்கள். கருணாநிதி ஆட்சியில் வன்னியர் சமுகத்திற்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. திமுக, காங்கிரஸ்க்கு பல தேர்தலில் வன்னியர்கள் ஆதரவு அளித்ததனர். 30 தொகுதிகளில் திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆனால் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் வினவினார்.நோட்டோ, சீட்டோ எனக்கு தேவையில்லை எனவும் 25 கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக தலைவரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன் எனவும், மந்திரி பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மக்களுக்காகவும், மண்ணுக்காகவும், மொழிக்காவும் போராடுவதே என் நோக்கம் என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை மன்னித்து விடுதலை செய்வோம் என ராகுல்காந்தி அறிவிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து விட்டார். துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் வீட்டில் நடத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறது எனவும் எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் கை நீட்டி கவர் வங்காத அரசியல்வாதி நான் என மீண்டும் சுட்டிக் காட்டினார். சிறை உணவால் தமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனக்கு அளிக்கப்பட்ட சிறை உணவு, சிகிச்சையில் மர்மம் இருக்கிறது என சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாமகவினர் சமூக வலைதளங்களினால் கேவலமாக பேசுவதால், மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அனுமதி தமக்கு வழங்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க