• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர கோரி 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தர்ணா

November 20, 2019

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர கோரி 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கோவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் கோவை மண்டல அனைத்து வங்கி ஓய்வூதியர்கள் இணைந்து நீண்ட கால கோரிக்கையான 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த 30சதவீத குடும்ப ஓய்வூதியத்தை வழங்க கோரியும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரிமியம் குறைக்கவும், வங்கிகளின் ஊழியர்களின் பற்றா குறையை நீக்க வலியுறுத்தியும், வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும் என்றும், 100சதவீத பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நாளை 21 ஆம் தேதி டெல்லியில் மிக பெரிய அளவில் பேரணியை நடத்த போவதாகவும், அதற்கு அரசு செவி சாய்க்கவில்லையென்றால் இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த போவதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க