• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்

April 6, 2025 தண்டோரா குழு

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவை மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கோவை கரும்புக்கடை பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.மேலும் ஒன்றிய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் வக்ஃப் திருத்த முன் வடிவு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

நள்ளிரவில் நிறைவேற்றி இருக்கின்ற இந்த சட்டம் மத சுதந்திரத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான வெளிப்படையான தாக்குதலாகும்.இச்சட்டத்தை எதிர்த்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவை மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில்,இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஷேக்முகமது தலைமை உரை ஆற்றினார். மேலும் SIO முன்னாள் மாநிலத் தலைவர் சிக்கந்தர்பாட்ஷா கண்டன உரையாற்றினார், இந்நிகழ்வில் SIO உறுப்பினர்கள் மற்றும் கரும்புக்கடை பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு பாசிச பாஜக அரசுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இப்போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசிற்கு இந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதா திரும்பப் பெரும் வரை தங்களுடைய ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் மேலும் இதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. வக்ஃப் சட்ட மசோதா திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க