• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐடி கம்பெனி ஊழியர்கள் அதிகம் – கோவை எஸ்.பி பேட்டி !

June 5, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்கபட்ட செல்போன்கள் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

30 லட்ச ரூபாய் மதிப்புடைய
162 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை தவறவிட்டவர்கள், பறிகொடுத்தவர்களிடம் அவற்றை ஒப்படைத்தார்.

பின்னர் எஸ்.பி.பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

கடந்த ஏப்ரல் முதல் 1160 செல்போன்களை மீட்டு கொடுத்து இருக்கின்றோம் எனவும்,இது வரை இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் நடந்த 22 கொலை வழக்குகளில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர்,கோவை மாவட்டத்தில்
20 மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதுவரை 177 லாட்டரி வழக்குகள் பதியப்பட்டு 15 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை தொடர்பாக 280 வழக்குகள் பதியப்பட்டு 503 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது எனவும் இதன் மதிப்பு 53 லட்சம் எனவும் தெரிவித்தார்.சைபர் கிரைமில் 6.50 கோடி மதிப்புடைய பணம் மோசடி புகார்கள் வந்துள்ளது எனவும்,இதில் 6 கோடி ரூபாய் வரை வங்கி கணக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

லோன் ஆப் மூலம் ஏமாந்தவர்களில் ஐடி கம்பெனி ஊழியர்கள் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் கோவை புறநகர் பகுதியில் 85 விளம்பரபலகைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது எனவும், விளம்பர பேனர்களை மட்டும் அகற்றாமல் அதை பொறுத்தும் கம்பிகளையும் அகற்ற சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

கருமத்தம்பட்டி பேனர் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாக எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க