February 4, 2026
தண்டோரா குழு
கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொண்டாடும் இந்தியாவின் முன்னணி அமைப்பான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட், தனது நான்காவது சீசனை இன்று அறிவித்துள்ளது.
இந்த போட்டிகள் இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஆறு நகரங்களான பாட்னா,குவாலியர், அமிர்தசரஸ், கோவை, ஹல்த்வானி மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களில் நடைபெறும்.இந்த கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதம் துவங்க உள்ளது. இந்த நிலையில் கோவைக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் வருகை தரவுள்ளனர்.
கடந்த சீசன்களில் கிறிஸ் கெய்ல், ஹர்பஜன் சிங்,இர்பான் பதான், யூசுப் பதான், ஷிகர் தவான்,தினேஷ் கார்த்திக் மற்றும் ராஸ் டெய்லர் போன்ற ஜாம்பவான்கள் விளையாடியது குறிப்பிடத்தக்கது.அதேபோல வரலாற்றில் முதல் முறையாக,அமிர்தசரஸ் நகரமும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்தவுள்ளது.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் வருகையின் மூலம், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை இந்த நகரம் காணவுள்ளது. கிறிஸ் கெய்ல், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் மற்றும் ராஸ் டெய்லர் போன்றோர் கடந்த காலங்களில் விளையாடியுள்ளனர்.சர்வதேச ஜாம்பவான்களை வரவேற்கும் இந்த நிகழ்வின் மூலம், கோவை உலகளாவிய விளையாட்டு அரங்கில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற உள்ளது. ஒழுக்கம், தொழில்முனைவு மற்றும் விளையாட்டு ஆர்வத்திற்குப் பெயர்பெற்ற கோயம்புத்தூர்,நகரின் முற்போக்கான மற்றும் போட்டி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கிரிக்கெட் திருவிழாவைக் காணத் தயாராக உள்ளது. மைதானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இணை நிறுவனர் ராமன் ரஹேஜா கூறுகையில்,
“தென்னிந்தியாவின் விளையாட்டு கலாச்சாரத்தின் வலிமையை கோயம்புத்தூர் பிரதிபலிக்கிறது. இங்கு முதல் முறையாக உலகளாவிய கிரிக்கெட் ஜாம்பவான்களை அழைத்து வருவது,இந்த மக்களின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கு ஒரு உலகளாவிய மேடையை அமைத்துக் கொடுப்பதாகும்,” என்று தெரிவித்தார்.
அட்டவணைகள், அணிகள், மைதானங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்பது பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஒரு தொழில்முறை லீக் ஆகும். இந்த லீக் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல சீசன்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டிகள், பரவலான ஒளிபரப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.