• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்

September 11, 2019 தண்டோரா குழு

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமையேற்றியதற்காக ராஜஸ்தான் போலீசார் சரக்கு லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் படி சாலை விதி மீறல் உள்ளிட்ட குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி ராஜஸ்தானை சேர்ந்த லாரி ஓட்டுனர் பகவான் ராமு என்பவருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி டெல்லி போலீசார் இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இந்த தொகையை அவர் கடந்த 9 ஆம் தேதி ரோகினி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மோட்டார் வாகன சட்டப்படி அதிக அபராதம் விதிப்பதில் டெல்லி மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும் படிக்க