• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

February 20, 2018 தண்டோரா குழு

ரூபாய் 6.2 கோடியை 12 வாரத்துக்குள் செலுத்த லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் கோச்சடையான் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பெரிய அளவில்  வரவேற்பை பெற்றவில்லை.

இதற்கிடையில், லதா ரஜினிகாந்த், ரஜினியின் கோச்சடையான் படத்திற்காக ஆட்பிரோ என்ற நிறுவனத்திடம் ரூ 10 கோடி கடன் வாங்கியிருந்தார். இதில் இன்னும் ரூ 8.5 கோடி திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது.அப்போது, விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 6.2 கோடியை 12 வாரத்துக்குள் செலுத்த லதா ரஜினிகாந்திற்கு  உத்திரவிட்டுள்ளது. இதனை லதா ரஜினிகாந்த் இயக்குனராக உள்ள  மீடியா ஒன் நிறுவனம் சார்பில் வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க