• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டனில் மீண்டும் கைதான விஜய் மல்லையா சிறுது நேரத்தில் ஜாமீனில் விடுதலை

October 3, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச்செலுத்தவில்லைஎன அவர் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, இங்கிலாந்திற்கு தப்பிய விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. அதைபோல் விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவியையும் இந்திய அரசு கோரியிருந்தது.

இதற்கடையில் கடந்த ஏப்ரலில் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில்,இந்தியாவில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக தொழிலதிபர் விஜய் ,மல்லையா லண்டனில் இன்று மீண்டும் கைது செய்யபட்டார். இதையடுத்து பிணையில் விடுவிக்கக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க