September 28, 2020
தண்டோரா குழு
கோவை கோவிட் கேர் பாதுகாப்பு திட்டம் மூலம் ரோட்டரி சங்கங்களின் சார்பில் 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்டிலேட்டர் மற்றும் மயக்கவியல் கருவிகள் என மருத்துவ உபகரணங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் covid-19 வைரஸ்களின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தநிலையில் கோவை கோவை கோவிட் பாதுகாப்பு என்ற ஒரு திட்டத்தை ரோட்டரி சங்கங்கள் துவங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் கோவை ரோட்டரி கிளப் ஆஃப் டவுன் டவுன் மற்றும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆஃப் ஜெனித் ஆகியவை இணைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு புதியதாக 53 லட்சம் மதிப்பிலான குழந்தைகளை காக்க புதிய வெண்டிலேட்டர் கள் மயக்கவியல் கருவிகள் ஸ்பேஸ் பம்ப் சிறுவர்களுக்கான சிரின்ஜ் பை ஸ்பெக்டர் மானிட்டர் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும் எம் டர்போ டாப்ளர் ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டுள்ளது.இதன் விலை ரூ 13 லட்சம் ஆகும் இந்த கருவியை எங்கு எடுத்துச் சென்று வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் 800 கிராம் குழந்தைகள் முதல் 30 கிலோ எடை வரையிலான குழந்தைகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்
இதுகுறித்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கூறுகையில்,
கோவை கோவிட் கேர் திட்டம் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு தற்போது எங்களுடைய ரோட்டரி சங்கங்கள் மூலம் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது தற்போது நாங்கள் அளித்துள்ள மருத்துவ உபகரணங்களை கொண்டு குழந்தைகளை மிகச் சிறப்பாக சிகிச்சைகள் கொடுத்து பாதுகாக்க முடியும். இந்த திட்டத்திற்கு அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் அறக்கட்டளை உதவியுடன் நிதி திரட்டப்பட்டது அதன் பின்னர் தற்போது அரசு மருத்துவமனைக்கு இந்த கருவிகள் அனைத்தும் முதல்கட்டமாக 53 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் எங்களுடைய ரோட்டரி சங்கங்கள் மூலம் வழங்குவோம் என்றார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறுகையில்,
தற்பொழுது இந்த வைரஸ்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது முன்பு தனியார் மருத்துவமனைகளிலும் இஎஸ்ஐ மருத்துவ மனைகளிலும் தான் covid-19 வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் கோவை அரசு மருத்துவமனையிலும் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீரிய நிலையிலுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கோவை அரசு மருத்துவமனையில் இதுபோன்ற மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி சங்கங்கள் மூலம் கிடைக்கப்பெற்றது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக இவர்கள் வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.