October 12, 2020
தண்டோரா குழு
வருகிற பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானை புது அடுப்பும் இலவசமாக அரசு வழங்ககோரி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பாக கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கார்டுகளுக்கு இலவச பச்சரிசி சர்க்கரை பருப்பு எண்ணெய் முந்திரி திராட்சை போன்ற உணவுப் பொருட்கள் ஆயிரம் ரூபாயுடன் உதவி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் புது அரிசியை புது பானையில் வைத்து பொங்கிட புதுப்பானை ஒன்றும் புதிய அடுப்பு ஒன்றும் இரண்டு பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு நமது அரசு இலவசமாகத் தந்து உதவிட வேண்டுகிறோம்.
தமிழகத்தில் கொள்ளார் சமூக மக்கள் 40 இலட்சம் பேர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் மண்பாண்ட தொழில் செய்து வருகின்ற தொழிலாளர்கள் தற்போது 4 லட்சம் பேர்கள் மட்டுமே சட்டி பானைகள் அகல் விளக்குகள் உண்டில் அடுப்பு தெய்வ திருவுருவங்கள் போன்ற பொம்மைகள் செய்து ஜீவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வு மலர பொங்கல் பண்டிகையின்போது கார்டுதாரர்களுக்கு ஒரு புது புது அடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.