April 21, 2020
தண்டோரா குழு
கொரோனாவை தடுக்க ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை துரிதமாக கண்டறிவதற்கு சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணம்.இதற்கிடையில், ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்திய மாநிலங்களில் தவறான பரிசோதனை முடிவுகள் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றாக புதிய கருவிகள் பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.