• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.500 ,100,50,20 நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

December 24, 2016 தண்டோரா குழு

ரூ.500 ,100,50,20 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்தில், மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ரூபாய் 500, 1000 வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஆளாகி வருகின்றனர். ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூ 2000 தான் அதிக அளவில் வருகிறது. இதனால், சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனைப் போக்க மத்திய அரசாங்கம் தற்பொது புதிய ரூ 500 அச்சடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மைய அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், “ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 10ம் தேதி முதல் தினமும் 35 லட்சம் எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது, இங்கு தினமும், 1 கோடியே 90 லட்சம் எண்ணிக்கை அளவுக்கு பல மதிப்புகள் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.500 நோட்டுகள் மட்டும் தினமும் ஒரு கோடி நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. மற்றவை ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை” என்றார்.

மேலும் படிக்க