• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.1,400 கோடிக்கான ஐபிஓ ஆவணங்களை சமர்பித்த க்ளீன் சைன்ஸ் மற்றும் டெக்னாலஜி

April 8, 2021 தண்டோரா குழு

சிறப்பு ரசாயன உற்பத்தியாளரான க்ளீன் சைன்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனம், மூலதன சந்தைகளின் வழிகாட்டி செபி-யிடம் முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 1,400 கோடி ரூபாய் பொது பங்கு வெளியீடுகளாக (ஐ.பி.ஓ) வைத்துள்ளது.

இந்த பொது பங்கு வெளியீடு முற்றிலுமாக, கையிருப்பு பங்கு விற்பனை (Offer For Sale) ஆகும். அதாவது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரஸ்பெக்டஸின் படி, தற்போதுள்ள
விளம்பரதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் கையிருப்பு பங்கு விற்பனை ஆகும்.

அனந்த்ரூப் நிதி ஆலோசனை சேவைகள், அசோக் ராம்நாராயண் பூப்,கிருஷ்ணகுமார் ராம்நாராயண் பூப், சித்தார்த்த அசோக் சிக்கி, மற்றும் பார்த் அசோக் மகேஸ்வரி
ஆகியோர் ஒ.எஃப்.எஸ் – இல் பங்குகளை வழங்குகிறார்கள்.க்ளீன் சைன்ஸ் மற்றும் டெக்னாலஜியானது செயல்திறன் இரசாயனங்கள்,மருந்து
இடைநிலைகள் மற்றும் எஃப்எம்சிஜி இரசாயனங்கள் போன்ற செயல்பாட்டுக்குரிய சிறப்பு இரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும்.அதன் தயாரிப்புகள் முக்கிய தொடக்க நிலை பொருட்களாக பயன்படுகிறது. தடுப்பான்களாக அல்லது சேர்க்கைகளாக வாடிக்கையாளர்களால், தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனமானது சந்தைகளில் நன்கு அறியப்பட்ட மற்றும் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.சிறப்பு இரசாயன பொருட்களுக்கான சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. நன்கு பன்முகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள்,மற்றும்கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்கள் உற்பத்தி
அத்தியாவசியங்களில் பெரும்பாலும் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில்
உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பலர் இந்தியாவில் இருப்பது போல மற்ற
நாடுகளான சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, தைவான், கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட
பிற சர்வதேச சந்தைகளிலும் அடக்கம்.

நிறுவனத்தின் வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஏற்றுமதியிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆக்சிஸ் கேபிடல், ஜே.எம் பைனான்சியல் மற்றும் கோட்டக் மஹிந்திரா கேபிடல்ஆகியவை ஐபிஓ-விற்கான வணிக வங்கியாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளன. நிறுவனத்தின்ஈக்விட்டி பங்குகள் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ ஆகியவற்றில் பட்டியலிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க