• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமர் பிறந்த இடத்தில் நிச்சயம் ராமருக்குக் கோயில் கட்டப்படும் இதுதான் பாஜக-வின் குறிக்கோள் – அமித்ஷா

January 30, 2019 தண்டோரா குழு

ராமர் பிறந்த இடத்தில் நிச்சயம் ராமருக்குக் கோயில் கட்டப்படும் இதுதான் பாஜக-வின் குறிக்கோள் என பாஜக தலைவர் அமித்ஷா பேசியுள்ளார்.

உ.பி.,யின் லக்னோ மற்றும் கான்பூரில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

பா.ஜ., அரசு அனைவருக்காகவும் செயலாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல. ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உ.பி.,யில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பா.ஜ., தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். அகிலேஷ் – மாயாவதி ஜாதி அரசியலை மட்டும் செய்கிறார்கள். குற்றம், ஊழல், ஜாதி இவை மட்டுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.

மோடி போன்ற ஒருவரால் மட்டுமே எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் நாட்டை வழிநடத்த முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க பா.ஜ., விரும்பவில்லை. ராமஜன்ம பூமியைப் பற்றிப் பேச காங்கிரஸுக்கு எந்த உரிமையும் கிடையாது.இதுதொடர்பான வழக்கு எப்போது விசாரணைக்கு வந்தாலும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தடையாக உள்ளனர்.ராமர் பிறந்த இடத்தில் நிச்சயம் ராமருக்குக் கோயில் கட்டப்படும். இதுதான் பாஜக-வின் குறிக்கோள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜக உறுதியாக உள்ளது. 42 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

பாஜக-வைக் கண்டு பயந்ததால் தான் இன்று எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து மாற்றுக்கட்சியாக உருவாக நினைக்கின்றனர். மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேசும், புதன்கிழமை மம்தாவும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காட்டிக் கொண்டுள்ளன எனப் பேசினார்.

மேலும் படிக்க