• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமர் பாலத்தை அகற்ற மாட்டோம் மத்திய அரசு திட்டவட்டம்

March 16, 2018 தண்டோரா குழு

ராமர் பாலத்தை அகற்றாமல், வேறு வழியில் சேது சமுத்திரத் திட்டம்  நிறைவேற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர்.அதே நேரத்தில்  ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது.

தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை.

இந்த திட்டம் மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சி காலத்தில், 2005-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது. சேது சமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

ராமர் பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில்  எழுத்து பூர்வமான  பதில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளது.

மேலும் படிக்க