• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்து பா.ஜ.க ஏன் எதுவும் கேட்கவில்லை” – ஸ்டாலின்

April 29, 2017 தண்டோரா குழு

எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் பாரதிய ஜனதாக் கட்சி, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்து எதுவும் கேட்காதது ஏன் ? என்று தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தில்லி போலீஸ் உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளையும் அனுப்பி தமிழக அரசு நிர்வாகத்தை நிலைகுலைய வைத்துள்ளது மத்திய அரசு.

எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் பாரதிய ஜனதாக் கட்சி, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்து எதுவும் கேட்காதது ஏன்?

திராவிட உணர்வு மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் பாரதிய ஜனதாவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற அவசரத்தில் தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு, மாநில நிர்வாகத்தை தேக்க நிலைக்கு கொண்டு வந்து விட்டது மத்திய அரசு.

அதிமுகவின் ஊழல் அணிகளை இணைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு சதவிகிதம் கூட தமிழக மக்கள் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. தனது சுயநலத்திற்காக அரசியல் சட்ட அமைப்புகளை கண்மூடித்தனமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்கும் முயற்சியை கைவிட்டு விட்டு, தமிழக அமைச்சர்களின் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை வைத்து தயவு தாட்சண்யமின்றி அமைச்சர்கள் மீது நடடிவக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க