• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தூய அன்னை சாரதா தேவியார் 166 ஆவது பிறந்த நாள் விழா

December 28, 2018 தண்டோரா குழு

கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தூய அன்னை சாரதா தேவியார் 166 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

காலை மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இந்த விழாவில் வித்யாலய மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வித்யாலய நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டனந்தர் விழாவில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவங்களின் மாணவர்கள் பங்குபெற்ற பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கோவிலில் விசேஷ ஹோமம் நடைபெற்றது. இதில் வித்யாலய நிறுவனங்களின் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவரும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை பெண்கள் பங்கு பெற்ற சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்றனர் . இதற்கான ஏற்பாடுகள் வித்யாலய நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டனந்தர் தலைமையில் செய்யப்பட்டது.

மேலும் படிக்க