• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய பேரறிவாளன் மனு தள்ளுபடி

March 14, 2018 தண்டோரா குழு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக்கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை இந்த தண்டனையிலிருந்து விடுவிக்கும்படி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் சி.பி.ஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எவ்வாறு ஏற்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது எனவும்,இது தொடர்பாக நான்கு வாரத்தில் சி.பி.ஐ பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க