• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு !

December 14, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து 3 மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது. மூன்று மாநில முதல்வர்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுப்பார் என கட்சி தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதற்காக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதற்கிடையே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் மற்றும் டயர்கள் தீ வைத்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது. சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட்டிடம் இன்று தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட்டும், துணை முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க