July 11, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் டவுன்ஹால் மணிகூண்டு பகுதியில் கோவை மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயூரா ஜெயக்குமார் தலைமையில் 10 மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியை பிரபல வார இதழ் (குங்குமம்) அவதூறு பரப்பும் விதத்தில் கேலிச்சித்திரம் வரைந்தும், பத்திரிக்கை தர்மத்தை மீறி கேலி சித்தரத்தை வெளியிட்ட வார இதழ் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டனத்தை பதிவு செய்யும் விதத்தில் வாரப்பத்திரிக்கை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடியதாகவும் பொது இடங்களில் போராட்டம் நடத்தியதற்காக பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.