• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை – மம்தா பானர்ஜி

December 20, 2018 தண்டோரா குழு

ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்த்து எதிர்க்கட்சி ஒருங்கிணைந்து வருகிறது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை அகற்ற ஓர் அணியில் ஒருங்கிணைந்துள்ளோம். யாரும் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது, எல்லோரும் சேர்ந்து ஒரே முடிவை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை பற்றி விவாதிக்க நேரம் இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நான் தனியாக இல்லை, நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்.

ராகுல்காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து விவாதிக்கலாம்.

மேலும் படிக்க