• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தியின் செயல் ஏற்கத்தக்கது அல்ல-சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

July 20, 2018 தண்டோரா குழு

பிரதமரை ராகுல் காந்தி கட்டித்தழுவியது ஏற்கத்தக்கது அல்ல என மக்களைவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.

மக்களவை இன்று காலை கூடியதும்,எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதையடுத்து காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.அப்போது,மத்திய அரசின் மீதும்,பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பின்னர்,தனது பேச்சை முடித்து கொண்ட அவர் பிரதமர் மோடி இருக்கும் இடத்திற்கு சென்று அவரைக் கட்டித்தழுவினார்.மோடியும் சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இச்செயலை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தனது இருக்கையில் அமர்ந்திருந்த பேசிக்கொண்டிருந்த போது ராகுல்காந்தி கண் அடித்தார்.இது சமூக வலைதளங்களில் வேகமாக டிரண்டிங் ஆகி வருகிறது.

இந்தநிலையில்,இது குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில்,இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை ராகுல் காந்தி கட்டித்தழுவியது ஏற்கத்தக்கது அல்ல.மக்களவையில் தமது நண்பரைப் பார்த்து ராகுல் கண்ணடித்ததையும் தவறு.யாரும் கட்டிப்பிடிக்க கூடாது என நான் கூற மாட்டேன்.நானும் ஒரு தாய் தான்.அவைக்கு என்று ஒரு மரபு உள்ளது. அது காக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க