• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல்காந்தி இந்தியர் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தெரியும் – பிரியங்கா காந்தி

April 30, 2019 தண்டோரா குழு

ராகுல்காந்தி இந்தியர் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தெரியும் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக புதிய பிரச்னையை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கிளப்பியுள்ளார். ராகுல் காந்தி தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று தான் இயக்குனராக இருந்த பேக்காப்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களை தாக்கல் செய்தபோது, அவற்றில் குறிப்பிட்டுள்ளார் என்று சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இங்கிலாந்து குடியுரிமை தொடர்பாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி பாஜக தலைவர் நாட்டை தவறாக வழிநடத்தி வருவதாகவும் உரிய ஆவணங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா காந்தி,

ராகுல் காந்தி இங்குதான் பிறந்தார் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும்.ராகுல்காந்தி இந்தியாவில் பிறந்து வளர்ந்ததை அனைவரும் கண்டு இருக்கிறார்கள். தேர்தல் தோல்வி பயம் காரணமாக மத்திய அரசு இப்போது நோட்டீஸை ராகுக்கு அனுப்பி இருக்கிறது. எங்களுக்கு தேர்தல் தோல்வி பயம் ஏதும் இல்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்க கூடாது என்பதில்தான் நாங்கள் கவனமாக உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க