• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயி்ல் மறியல் போராட்டம் – மு.க. ஸ்டாலின், கனிமொழி கைது

January 20, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயி்ல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம், தனியார் பள்ளிகள் விடுமுறை, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், தொழிற்சங்கள் வேலைநிறுத்த போராட்டம் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்படி சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க-வினர் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டத்திற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார். தமிழகத்தின் பல இடங்களில் ஏராளமான தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க