உ.பியில் ரயிலை தவறான பாதையில் கொடியசைத்து திருப்பிவிட்டதிற்காக பிப்னா ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
உத்தர பிரதேஷ் மாநிலத்தில், பிப்னா ரயில்நிலையத்திலிருந்து காசிபூர் நகருக்கு செல்ல வேண்டிய சப்ரா வாரணாசி இண்டர்சிட்டி ரயில் மாவ் நகருக்கு செல்லும் பாதையில் சென்றுவிட்டது.அதன் பின்னர் ரயில் தவறான பாதையில் செல்வதை உணர்ந்த ரயில் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிப்னா ரயில்நிலைய அதிகாரிக்கு தகவல் தந்தார்.
தவறை அறிந்த அவர், மீண்டும் அந்த ரயில் பிப்னா ரயில்நிலையத்திற்கு திரும்பி வர செய்தார். சப்ரா வாரணாசி இண்டர்சிட்டி ரயில் தவறான பாதையில் சென்றதற்காக, பிப்னா ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
சுமார் 25 நிமிடம் தாமதத்திற்கு பிறகு, சரியான பாதையில் ரயில் சென்றது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்