• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரபேல் புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

April 2, 2019 தண்டோரா குழு

ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பிலான புத்தகத்தை, சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்திலேயே வெளியிட திட்டமிடப்பட்டு, மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது .இந்நிலையில் “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.அங்கு வந்த ஆயிரம் விளக்குத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி கணேஷ், தேர்தல் விதிமீறல் எனக்கூறி, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தடை விதித்ததோடு, சுமார் 150 புத்தகங்களை பறிமுதல் செய்தார்.

பின்னர் இந்த குறித்து பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புத்தகத்தை வெளியிட தடை விதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் சம்பவம் பற்றி சென்னை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க