• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி ரசிகர் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சைதை ரவி நீக்கம்

May 29, 2017 தண்டோரா குழு

ரசிகர் மன்ற கட்டுப்பாட்டிற்கும்,ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சைதை ரவிவை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும்,ஒழுக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சைதை ரவியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகவும், அவருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு கொள்ள கூடாது எனவும் தொடர்பு கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமை மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பொது விவாத நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் பங்கேற்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க