• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர்- சந்தோஷ்

June 1, 2018 தண்டோரா குழு

ரஜினிகாந்த் பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர் என நீங்க யார் என்று கேட்ட சந்தோஷ் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இதில் 13 பேர் பலியானார்கள்.படுகாயமடைந்த 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது ஒரு இளைஞரிடம் சென்ற ரஜினிகாந்த் ‘எப்படி இருக்கீங்க’ என்று கேட்க,அதற்கு அந்த இளைஞர் ‘யார் நீங்க?” என்றார்.எனினும்,ரஜினி “நான் ரஜினிகாந்த்… சென்னையிலிருந்து வந்திருக்கேன்..” என்றார். உடனே அந்த இளைஞர், “நாங்க 100 நாட்களாக போராடிக்கிட்டிருக்கோம். அப்போ வராத நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க…” என்று கேள்வி எழுப்பினார்.அப்போது ரஜினிகாந்த், அவரை இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டுவிட்டு அடுத்த படுக்கையை நோக்கிச் சென்றார்.

இதற்கிடையில்,நீங்க யார்,‘நான்தான்பா ரஜினிகாந்த் எனும் ஹேஷ் டேக்குடனான பதிவுகள் சமூக வலைதளங்களில்’ வைரலாகின.

இந்நிலையில் ரஜினியிடம் கேள்வி எழுப்பிய இளைஞர் சந்தோஷ், தான் என்ன நோக்கத்துடன் ரஜினியிடம் பேசினேன் என்பது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

அதில்,ரஜினிகாந்திடம் 100 நாட்களாக ஏன் வரவில்லை என தான் கேட்ட நோக்கம் வேறு.ரஜினிகாந்த் பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர்.நான் யார் நீங்க? என கேட்டதன் நோக்கம் வேறு.அவர் கடந்த 100 நாட்களில் ஒருநாள் வந்திருந்தால் எங்கள் போராட்டம் உலக அளவில் சென்று வெற்றிப்பெற்றிருக்கும் என உரிமையுடன் கேள்வி கேட்டேன்.ஆனால்,நான் கூற வந்ததை ஊடகங்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் திரித்து கூறிவிட்டனர்” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க