October 4, 2017
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக தமிழக அரசை விமர்சித்தும் அரசியல் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.இதுமட்டுமின்றி அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாகவும் தெரிவித்தும் விட்டார்.
மேலும் , கமல் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தும் வருகிறார்.இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். புது கட்சி தொடங்குவது குறித்தும் மக்களிடையே நன்மதிப்பை பெறுவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.