• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யோகா நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்லூரி மாணவி

April 29, 2020 தண்டோரா குழு

உயிர் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள். யோகா நடனம் மூலம் கல்லூரி மாணவி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கொரோனா தொடர்பான யோகா விழிப்புணர்வு நடன வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் பயிலும் மாணவி வைஷ்ணவி சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.உடலை ரப்பர் போல வளைத்து யோகாசனம் செய்த வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் விழித்திரு! விலகி இரு!வீட்டில் இரு! என கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மயூரி உயிர் காக்கும் யோகாசனம் செய்தபடி மருத்துவர்கள், செவிலியர்களை போற்றுங்கள், கைகளை சுத்தமாக கழுவுதல்,விலகி இருத்தல்,மனித நேயம் வளர்போம், வதந்திகளை நம்பாதீர் என யோகா நடனமாடியபடியே பதாகைகளை காண்பித்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

2019ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற முதலாவது ஆசிய யோகா போட்டியில் இந்தியா,இலங்கை, சீனா,தாய்லாந்து, மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.21 வயது முதல் 25 வயதிற்க்கு உட்பட்ட பேக்வேர்ட் பென்டிங் கேட்டகிரி (Backward pending category)ல் தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் இவர் பதக்கங்களை வென்று உள்ளார்.

மேலும் படிக்க