• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘யார் எட்டப்பர் என ஜெயக்குமார்,கண்ணாடி முன் நின்று பார்த்தால் தெரியும்’ – டிடிவி தினகரன்

August 16, 2017 தண்டோரா குழு

யார் எட்டப்பர் என்பது அமைச்சர் ஜெயக்குமார், கண்ணாடி முன் நின்றுப் பார்த்தால் தெரியும் என்று அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“எங்களால் உருவாக்கப்பட்ட அரசு தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கட்சியை கொல்லைப் புறமாக கைப்பற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் சதி செய்து வருகின்றனர்.இதுபோன்ற செயல்கள் செய்வதை அவர்கள் நிறுத்த வேண்டும், இல்லை என்றால் அவர்கள் திருத்தப்படுவார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்காக என்னுடன் ஓட்டு கேட்டவர்கள் தான் இப்போது எனக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மாற்றிப் பேசுவதற்கு பயம் தான் காரணம்.

ஜெயக்குமாருக்கு பதவி கொடுத்தது சசிகலா தான். யார் எட்டப்பர் என்பது ஜெயக்குமார் கண்ணாடி முன் நின்று பார்த்தால் தெரியும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க