• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ம.பி. யில் குழந்தைகளை அடித்த அமைச்சர்

June 1, 2017 தண்டோரா குழு

மத்தியபிரதேஷ பாஜக உணவுத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் துருவே பொது இடத்தில் குழந்தைகளை அடித்த காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பாஜக அரசின் உணவுத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் துருவே, அம்மாநிலத்தின் டிண்டோரி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றுள்ளார். மணமகனை நடனமாடி உறவினர்கள் அழைத்து வரும் போது நடனமாடியவர்கள் மீது பணம் வீசுவது வட இந்திய திருமணங்களில் வழக்கம். அதன்படி, மணமகனின் உறவினார்கள் நடனமாடி வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து அமைச்சர் ஓம் பிரகாஷும் நடனமாடி, பணத்தை அவர்கள் மீது வீசியுள்ளார்.

அப்போது கீழே விழுந்திருந்த பணத்தை அங்கிருந்த குழந்தைகள் எடுக்க முயன்றுள்ளனர். அந்த குழந்தைகளை அமைச்சர் துரத்தி கருணையில்லாமல் அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்து, அதை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த காணொளி வைரலாக பரவி வருகிறது. இதுக்குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க