• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோப்ப நாய்க்கு பணியில் ஆர்வம் குறைந்ததால், பணியிலிருந்து நீக்கம்

October 20, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறையில் பணியாற்றி வந்த மோப்ப நாய், வெடிகுண்டுகளை மோப்பம் பிடிப்பதில் ஆர்வம் குறைந்ததால், பணியிலிருந்து நீக்கப்பட்டது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் லங்க்லே நகரில் மத்திய புலனாய்வு துறை அமைந்துள்ளது. அந்த துறையில் வெடிகுண்டுகள், போதை பொருட்கள், ஆபத்தான ஆயுதங்கள் ஆகியவற்றை மோப்பம் பிடிக்க உதவும் லாப்ரடார், ஜெர்மன் ஷெபர்ட் மற்றும் டாபர்மேன் இனங்களை சேர்ந்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கருப்பு லப்ரடோர் இனத்தை சேர்ந்த லூலூ என்னும் நாய்க்கு இந்த பயிற்ச்சியை பெற்று வருகிறது. ஆனால், சிறிது நாட்களுக்கு பிறகு, அந்த பயிற்சிகளில் கலந்துக்கொள்ளும் ஆர்வம் லூலூவிற்கு குறைய தொடங்கியது. அதன் ஆர்வம் குறைவதை கண்ட அதன் பயிர்ச்சியாளர்கள், வித்யாசமான விளையாட்டு, உணவு ஆகியவற்றை அதற்கு தந்து, அதன் கவனத்தை திருப்ப முயன்றனர். ஆனால், அவர்களுடைய முயற்சி வீணானது. இதையடுத்து, லூலூவை பணியிலிருந்து நீக்க செய்ய மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் முடிவு செய்து அதை பணியிலிருந்து நீக்கினர்.

லூலூவிற்கு பயிற்சி அளித்தவர் லூலூவை தத்து எடுத்து கொண்டார். தற்போது, வெடிகுண்டு, போதை பொருட்களை மோப்பம் பிடிப்பதை விட்டுவிட்டு, புதிய குடும்பத்தினரின் குழந்தைகளுடனும், வீட்டை சுற்றியுள்ள அணில், முயல் ஆகியவற்றுடன் விளையாடி மகிழ்கிறது.

மேலும் படிக்க