October 12, 2020
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை குஷ்பு
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார்.இதற்கிடையில், கடந்த சில நாட்களாக அவர் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.இன்று காலை குஷ்புவின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் குஷ்பு பாஜகவில் இணைந்தார்.
அப்போது பேசிய அவர்,
பாஜகவில் இணைவது மகிழ்ச்சி.
எது நாட்டுக்கு நல்லது என உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன்.மோடி மாதிரியான ஒரு தலைவரால் தான் நாடு முன்னேற முடியும். மோடி நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார்.தேசம் முன்னோக்கிச் செல்லவும் சரியான பாதையில் செல்லவும் பிரதமர் மோடி போன்றவர்கள் இந்நாட்டுக்குத் தேவை என கூறினார்.